General
6 மாதங்களில் 700 குழந்தைகள் மரணம்…. என்ன காரணம் தெரியுமா…???
ஆப்கானிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 700 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக பிபிசி அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான். ஆப்கானிஸ்தானில் மட்டும் 3.2 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் 40 ஆண்டுகால போர் வறுமை, மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் உருவான நிலை என பல காரணங்கள் உள்ளன. இங்குள்ள மருத்துவமனைகளில் 7-8 படுக்கைகளில் சுமார் 18 குழந்தைகள் வரை கிடக்கின்றனர். இங்கே குழந்தைகள் மயக்கமடையவில்லை, மாறாக விழித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நகரவோ அல்லது ஒலி எழுப்பவோ முடியாத அளவிற்கு மிகவும் பலவீனமாக உள்ளனர். இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.