General
தென்காசி மாவட்டத்திற்கு 8 நாட்கள் ஊரடங்கு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!
தென்காசி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத விதமாக அம்மாவட்ட ஆட்சியர் 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் வரும் 20 ஆம் தேதி ஒண்டிவீரன் 253வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல நெல்கட்டும் செவல் கிராமத்தில் செப். 1ஆம் தேதி பூலித்தேவன் 309வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த இரு நிகழ்ச்சிகளிலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக மக்களின் பாதுகாப்பு கருதி தென்காசி மாவட்டம் முழுவதும் 18.8.2024 மாலை 6 மணி முதல் 21.8.2024 காலை 10 மணி வரையும், 30.8.2024 மாலை 6 மணி முதல் 2.9.2024 காலை 10 மணி வரையும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.