Catherine Tresa : இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மெட்ராஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்ற கேத்ரின் தற்போது அங்கு ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர் தற்போது தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் கேத்ரின் தற்போது புடவையில் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். கண்ணை கவரும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் கேத்ரினை கண்டு பலரும் ரசித்து வருகிறார்கள்.
இதுநாள் வரை கிளாமர் உடைகளில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தி வந்த கேத்ரின் தற்போது புடவையில் நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.