Cinema
போதையில் சிறுவனை தாக்கிய சம்பவம்…. பிரபல பாடகர் மனோவின் மகன்கள் மீது வழக்குப்பதிவு….!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக வலம் வரும் மனோவின் இரண்டு மகன்கள் மதுபோதையில் சிறுவனை தாக்கியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சம்பவத்தன்று கிருபாகரன் என்ற கல்லூரி மாணவரும் 16 வயது சிறுவனும் கால்பந்து விளையாட்டு பயிற்சியை முடித்துவிட்டு பாடகர் மனோ வீட்டுக்கு அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டுக்கு வெளியில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த மனோவின் இரண்டு மகன்கள் மற்றும் நண்பர்கள் இவர்கள் இருவரையும் அழைத்து போதையில் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுவனுக்கு உள்காயம் ஏற்பட கிருபாகரனுக்கு 3 தையல் போட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள தகவல் அறிந்து அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதால் போலீசார் தேடி வருகின்றனர்.