Connect with us
   

Cinema

பிரபல நடிகையின் கார் மோதி ஒருவர் பலி…. விளக்கம் அளித்த நடிகை…!!!

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர். இவர் முன்னதாக பல சீரியல்களில் நடித்துள்ளார். இப்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் சென்ற கார் மோதியதில் மஞ்சன் என்ற நபர் உயிரிழந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரேகா நாயர், “சம்பவம் நடந்தபோது மனநலம் பாதித்த ஒருவர் கீழே விழுந்து கிடந்தாரா அல்லது சாலையை கடக்க முயன்றாரா என்று தெரியவில்லை. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். நான் என் ஓட்டுனரிடம் காரை நிறுத்த சொன்னேன். அவர் கண்ணாடி வழியாக பார்ப்பதற்குள் காரை தாக்க ஆரம்பித்து விட்டார்கள். பின் எனக்கு தெரிந்த சிலரை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். முதலில் பூனையோ நாயோ தான் குறுக்கே வந்துவிட்டது என்று நினைத்தேன். நான் காரை ஓட்டவில்லை” என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரின் கார் ஓட்டுனர் பாண்டி என்ற நபரை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Continue Reading

More in Cinema

To Top