Cinema
மணிகண்டனை நேரில் பார்க்க ஆசைப்பட்ட பிரபல இயக்குனர்…. இறுதியில் நடந்த ட்விஸ்ட் என்ன தெரியுமா….???
தனது எதார்த்தமான நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக இருப்பவர் தான் பிரபல நடிகர் மணிகண்டன். இவர் நடிப்பில் வெளியான ஜெய்பீம், குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் 90களில் பிரபலமான இயக்குனரான ஆபாவாணன் நடிகர் மணிகண்டனின் நடிப்பை பார்த்து பிடித்து போனதால் அவரை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார். உடனே அவரின் நம்பரை வாங்கி நேரில் சந்தித்து பேச வேண்டுமென கூறியுள்ளார். இருவரும் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க முடிவு செய்து சென்றுள்ளனர். நேரில் சென்ற பின்னர் தான் அது குட் நைட் மணிகண்டன் அல்ல காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் என்று தெரிந்ததாம். இதனால் நொந்து போன இருவரும் ஒருவருக்கொருவர் சாரி சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.