Connect with us
   

Cinema

16000 கிமீ சைக்கிளில் பயணித்து பிரபல நடிகரை சந்தித்த ரசிகர்…. நெகிழ்ந்த நடிகர்….!!!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஹீரோவாக வலம் வருபவர் தான் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் இந்திய அளவில் பிரபலமானது. அதனை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

#image_title

அல்லு அர்ஜூனுக்கு தெலுங்கு தவிர பிற மொழிகளிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக 16000 கிமீ சைக்கிளில் பயணம் செய்து வந்துள்ளது பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த அந்த ரசிகர் அங்கிருந்து ஹைதராபாத் வரை சைக்கிளில் பயணம் செய்து வந்துள்ளார். இறுதியாக ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை நேரில் சந்தித்த அந்த ரசிகர் நெகிழ்ச்சியுடன் தனது பயணம் குறித்து பேசினார்.

மேலும் அல்லு அர்ஜூனுக்கு அந்த ரசிகர் மலர் செடி ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த ரசிகர் திரும்பி செல்வதற்கான ஏற்பாடுகளை அல்லு அர்ஜூன் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in Cinema

To Top