Television
மீனா ஸ்ருதி இடையே வெடித்த சண்டை…. கொண்டாட்டத்தில் விஜயா..!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஸ்ருதியின் அம்மாவை அழைத்து வீட்டில் மீனா உடன் சேர்ந்து ஸ்ருதி ஆட்டம் போடுவதாகவும், தன்னை மதிப்பதில்லை எனவும் அடுக்கடுக்காக புகார்களை கூறுகிறார். மேலும் இவை அனைத்திற்கும் காரணம் மீனா தான் எனவும் கொளுத்தி போடுகிறார்.

#image_title
இதனால் கோபமடைந்த ஸ்ருதி அம்மா நேராக சென்று மீனாவை பார்த்து கண்டபடி திட்டி விடுகிறார். அந்த சமயத்தில் அங்கு முத்து வர என்னாச்சு என்று மீனாவிடம் கேட்டு விஷயத்தை தெரிந்து கொள்கிறார். பின் இதை இப்படியே விடக்கூடாது அவங்க கிட்ட கேட்கலாம் வா என மீனா அழைத்து கொண்டு கோபமாக கிளம்புகிறார்.

#image_title
மற்றொரு புறம் ரவி மற்றும் ஸ்ருதி ஒன்றாக வீட்டிற்கு வர விஜயா ரவியிடம் தனியாக பேச வேண்டும் என்கிறார். அதனை தொடர்ந்து இருவரும் பேசி கொண்டிருக்கும் போது கோபமாக வரும் முத்து மற்றும் மீனா ரவியிடம் எங்கடா உன் பொண்டாட்டி இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியனும் என கூறி ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டு நால்வரும் கோபமாக சண்டை போடுகிறார்கள்.

#image_title
அதை வெளியில் இருந்து கேட்கும் விஜயா சந்தோசப்படுகிறார். ஆனால் அறைக்குள் அவர்கள் சிரித்து கொண்டு விஜயாவை ஏமாற்ற திட்டம் போட்டு தான் இந்த சண்டை போடும் டிராமவை நடத்துகிறார்கள். இது தெரியாமல் விஜயா அவர்கள் நிஜமாகவே சண்டை போட்டு பிரிந்து விட்டார்கள் என்று நினைத்து சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.