General
காரில் வந்து ஆடுகளை திருடும் கும்பல்…. காரில் திமுக கட்சிக்கொடி இருப்பதால் அதிர்ச்சி….!!!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே கீதாபுரத்தை சேர்ந்த குமார் மற்றும் கணேசன் ஆகியோர் தங்கள் வீடுகளில் ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். நேற்றைய தினம் கணேசன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற நிலையில் சினை ஆடுகளை மட்டும் முன்னதாகவே வீட்டிற்கு விரட்டி விட்டுள்ளார். பின் மாலையில் ஆடுகளை பட்டியில் அடைக்கும்போது மூன்று ஆடுகள் காணாமல் போயுள்ளன. உடனே இதுகுறித்து கணேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது திமுக கொடி கட்டிய வெள்ளை நிற ஃபார்ச்சூனர் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று காரில் இருந்து இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ஆடுகளை காரில் ஏற்றிக் கொண்டு திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திமுக கொடி கட்டிய காரில் திருடப்படும் ஆடுகள்!#DMK #flags #thefts #GOAT #viralvideo #CCTVCamera #caught #NewsUpdate #UpdateNews360 pic.twitter.com/gt0rQkygg8
— UpdateNews360Tamil (@updatenewstamil) September 16, 2024