General
கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை தரமாட்டேன்…. ராகுல் காந்தி தைத்த செருப்பை பாதுகாக்கும் நபர்…!!!!
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் கடந்த 26ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பயணம் செய்தபோது சாலை ஓரமாக காலணிகளை தைத்து கொண்டிருந்த ராம்சேட் என்பவரை பார்த்து அவரிடம் சென்று நலம் விசாரித்தார். மேலும் அங்குள்ள ஷூ ஒன்றை கையில் எடுத்த ராகுல் காந்தி அதை தனக்கு எப்படி தைப்பது என்று கற்று தருமாறு ராம்சேட்டிடம் கூறியுள்ளார். முதலில் தயங்கிய ராம்சேட் பின்னர் அவருக்கு கற்று கொடுத்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி தைத்த ஷூவை கேட்டு பலர் ராம்சேட்டை அணுகுகிறார்களாம். அதில் ஒருவர் 10 லட்சம் தருவதாக கூறினாராம். ஆனால் ராம்சேட்டோ கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் காந்தி தைத்த அந்த ஷூவை யாருக்கும் தரமாட்டேன். அவ்வளவு ஏன் அந்த ஷூவின் உரிமையாளருக்கே அதை தரமாட்டேன். மாறாக அதற்கான பணத்தை தருவேன் என கூறியுள்ளார்.