General
ஒரு லட்டின் விலை 1.50 லட்சம்…. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…???
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது ஏலம் விடப்பட்ட ஒரே ஒரு லட்டு மட்டும் சுமார் 1.50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக விநாயகர் கையில் லட்டு இருப்பது போன்ற பொம்மைகளை தான் செய்வார்கள். ஆனால் இந்த முறை உசிலம்பட்டி மக்கள் ஒருபடி மேலே சென்று விநாயகர் கையில் உண்மையான லட்டை வைத்து விட்டார்கள். அந்த லட்டோடு இருக்கும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து விநாயகர் கையில் இருந்த அந்த லட்டு ஏலம் விடப்பட்டது. அதை மூக்கன் என்பவர் சுமார் 1லட்சத்து 51ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். இதனால் நெகிழ்ந்து போன கிராம மக்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் கையில் இருக்கும் லட்டை ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.