General
வயநாட்டிற்காக திறக்கப்பட்ட டீக்கடை…. குவியும் பாராட்டு…!!!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பேரிடரில் இருந்து வயநாடு மக்கள் மீள்வது மிகவும் கடினம். மேலும் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் வயநாடு மக்களுக்கு உதவும் நோக்கில் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவிற்கு நிதி வசூலிப்பதற்காக சமூக ஆர்வலர்கள் சிலர் டீக்கடை ஒன்றை திறந்துள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அந்த கடையில், “இங்கு டீ குடிக்கலாம், பலகாரம் சாப்பிடலாம் பணம் வயநாட்டிற்கே” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.