General
உடம்பில் ஒரு இடம் கூட பாக்கி இல்ல… டாட்டூ குத்துவதில் சாதனை படைத்த பெண்….!!!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதன்படி அமெரிக்காவை சேர்ந்த 36 வயதாகும் எஸ்பெரன்ஸ் லுமினெஸ்கா ஃபியூயர்ஜினா என்ற இந்த பெண் முன்னாள் ராணுவ ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கலை மீதுள்ள ஆர்வம் காரணமாக தற்போது இந்த பெண்ணின் உடம்பில் 99.98 சதவீதம் டாட்டூக்கள் நிறைந்துள்ளன. கை, கால், உச்சந்தலை, நாக்கு, கண் இமைகள், வெள்ளை மற்றும் கருவிழிகள் அவ்வளவு ஏன் பிறப்புறுப்புகளை கூட விட்டுவைக்கவில்லை. அத்தனை இடங்களிலும் டாட்டுக்களை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரை பலரும் வித்தியாசமாக பார்த்து வருகிறார்கள்.