General
இருக்குற பஞ்சாயத்துல இவனுங்க வேற…. தவெக கொடியுடன் பைக் சாகசம் செய்த இளைஞர்….!!!!
நடிகர் விஜய்க்கு கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியாய் உள்ளது. சமீபகாலமாக அவர் என்ன செய்தாலும் அது ஏதாவது ஒரு பிரச்சனையில் சென்று முடிகிறது. இப்போது கூட பெரியார் பிறந்த நாளில் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சம்பவம் பெரியளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர அவரின் கட்சி கொடி மற்றும் கட்சி பெயர் என அனைத்துமே சிக்கலில் தான் உள்ளன. இப்படி உள்ள சூழலில் இளைஞர் ஒருவர் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியை இருசக்கர வாகனத்தில் கட்டியபடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அவர் செய்துள்ள இந்த சாகசம் வைரலான நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மற்றொரு புறம் ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்தை சந்தித்து வரும் விஜய்க்கு இதுபோன்ற செயல்கள் மேலும் தலைவலியாக மாறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.