Cinema
பொறுத்தது போதும் விடாமுயற்சிக்கு டாடா காட்டிய அஜித்… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வந்த விடாமுயற்சி படத்திற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு நாட்கள் செல்ல செல்ல சுணக்கம் காண தொடங்கியது. தற்போது சுத்தமாக படப்பிடிப்பு நடக்கவே இல்லை.

#image_title
இறுதியாக அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது. அதன் பின்னர் தற்போது வரை அவரை பெரிய திரையில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் எப்படி எல்லாம் கேட்க முடியுமோ அப்படி எல்லாம் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை கேட்டு விட்டார்கள்.
ஆனால் பாவம் கிடைத்தபாடில்லை. ஒருபக்கம் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த த்ரிஷா இவர்கள் இழுத்தடிப்பதை பார்த்து இது வேலைக்கு ஆகாது என்று கூறி தக் லைஃப் படத்திற்கு தாவி விட்டார். அவர் மட்டுமல்ல மற்ற நடிகர் நடிகைகளும் பிற படங்களில் கவனம் செலுத்த சென்று விட்டனர்.

#image_title
இந்நிலையில் நடிகர் அஜித்தும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். அதாவது நீங்கள் படத்தை எப்போது வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளுங்கள். படத்தை தொடங்கும் போது எனக்கு தகவல் அனுப்புங்கள் அப்போது நான் வருகிறேன். அதுவரை குட் பேட் அக்லி படத்திற்கு செல்கிறேன் என்று கூறி விட்டாராம்.
அஜித் எப்போதும் ஒரு படத்தை முழுவதுமாக முடித்த பின்னர் தான் அடுத்த படத்தில் நடிக்க தொடங்குவார். ஆனால் இந்த முறை தான் அதுவும் விடாமுயற்சி இழுத்தடித்ததால் தான் படம் முடியும் முன்பே அடுத்த படத்தின் தலைப்பு வெளியானது. தற்போது படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. அஜித்தின் இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்