
Cinema
ஓயாமல் வெடித்த விவாகரத்து சர்ச்சை… ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன்….!!!
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரத்யா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய இருப்பதாகவும், அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சன் ஓவர் அதிகாரம் செய்வதால் ஐஸ்வர்யா ராய் இந்த முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராய் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “ஆராத்யா பிறந்தபோது எந்த வலி நிவாரணியும் எடுத்துக்கொள்ளாமல் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் பிரசவ வலியை ஐஸ்வர்யா ராய் தாங்கிக்கொண்டார். அதேபோல் அறுவை சிகிச்சைக்கு பதிலாக இயற்கை பிரசவத்தையே தேர்ந்தெடுத்தார். அதனை நினைத்து எனக்கு பெருமைதான்” என கூறியுள்ளார். இதன் மூலம் அவர்கள் குடும்பத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.