Cinema
நயன் – விக்கி திருமண வீடியோவை வெளியிட முட்டுக்கட்டையாக இருக்கும் தனுஷ்….!!!!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமண வீடியோவை பல கோடிகள் கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் இப்போது வரை இந்த வீடியோ வெளியாகாமல் உள்ளது. அதற்கு காரணம் நடிகர் தனுஷ் என்று கூறப்படுகிறது. அதாவது நானும் ரவுடி தான் படத்தின்போதுதான் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் தொடங்கி உள்ளது. அதனால் அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும் இந்த திருமண வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளதாம் எனவே படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தனுஷ் இதற்கு அனுமதி தர வேண்டும். ஆனால் சில மனக்கசப்பு காரணமாக தனுஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் பேசாமல் உள்ளார். எனவே தான் இந்த வீடியோ இன்னும் வெளியாகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.