
Cinema
கெஞ்சி கேட்ட ஜெயம் ரவி… பிடிவாதமாக மறுத்த ஆர்த்தி… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்னர் பிரபல பாடகி கெனிஷா உடன் இருக்கும் உறவு தான் இதற்கு காரணம் என்று பலவிதமான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்ப காலத்தில் இருந்தே அவரின் மனைவி ஆர்த்தி தான் கையாண்டு வந்தாராம். இப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை ஜெயம் ரவி கேட்டும் ஆர்த்தி மறுத்து விட்டாராம். இதனால் தனது படத்திற்கு கூட ப்ரமோஷன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஜெயம் ரவி மெட்டா நிறுவனத்திடம் முறையாக கோரிக்கை வைத்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கை திரும்ப பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது