Cinema
விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்…. கூடியிருந்த நபர்களை அசிங்கமாக திட்டியதால் பரபரப்பு….!!!!
தமிழில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜீவா நடிப்பில் இந்தாண்டு தெலுங்கில் யாத்ரா மற்றும் தமிழில் மேதாவி கண்ணப்பா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் நடிகர் ஜீவா அவர் மனைவியுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளார். அதன்படி சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருந்த போது குறுக்கே பைக் வந்ததால் சாலை தடுப்பில் மோதி ஜீவாவின் கார் விபத்திற்குள்ளானது. இதில் ஜீவா உட்பட அவரின் குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். விபத்து காரணமாக அங்கு கூட்டம் கூட ஒருவர் என்னாச்சு சார் என கேட்டுள்ளார். அதற்கு ஜீவா அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இது அங்கிருந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடை திறப்பு விழாவில் ஜீவா நிரூபரிடம் சண்டைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.