Connect with us
   

Cinema

என்னை பத்தி வெளிய விசாரிச்சீங்களா…??? இயக்குனர் இளனிடம் கவின் கேட்ட அந்த கேள்வி…!!!!

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிய இளன் தற்போது நடிகர் கவினை வைத்து ஸ்டார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், படம் வரும் 10 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

#image_title

இதுவரை கவினின் படங்கள் எதுவும் ரிலீசுக்கு முன்பாக பெரியளவில் வியாபாரமாகவில்லை. கடந்த ஆண்டு வெளியான டாடா படம் கூட வெளியான பின்னர் வசூல் செய்தது. ஆனால் முதல் முறையாக ஸ்டார் படம் வெளியீட்டிற்கு முன்பே நல்ல வியாபாரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பணத்திற்காக கஷ்டப்படும் ஏழை வீட்டு இளைஞனாக கவின் அவரின் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். டிரைலர் பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படம் குறித்து கவின் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

#image_title

அதன்படி, அவர் கூறியதாவது, “எனக்கு கிடைத்த நண்பர்கள் போல பிறருக்கு கிடைப்பார்களா என்பது தெரியவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாய்ப்பு தேடி நான் அலைந்து கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர்கள் தான் எனது மொத்த செலவையும் பார்த்து கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கு திருமணமாக போகிறது அதனால் ஒரு இரண்டு மாதங்களுக்கு மட்டும் உன் செலவை நீ பார்த்துக்கோ என நண்பன் ஒருவன் கூறினான். அப்போ தான் அவன் கஷ்டம் புரிஞ்சது. அதன் பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

#image_title

இந்த படத்தோட கதைய இளன் என்கிட்ட சொல்லும்போது என்னை பத்தி வெளிய விசாரிச்சீங்களா? அப்படியே எனக்கான கதையா இருக்குனு சொன்னேன். இளன் ஸ்கிரிப்ட் பேப்பர் எதுவுமே எடுத்துட்டு வரல. அவரோட மனசுல இருந்து கதைய சொன்னாரு. நானும் மனசார உள்வாங்கி நடிச்சேன். ரிகர்சல் கூட பார்க்கல” என மிகவும் எமோஷ்னலாக பேசியுள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top