Cinema
மகனின் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நாகார்ஜுனா…. அப்போ அது உண்மை தானா….???
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இதனை தொடர்ந்து நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. மேலும் இன்று இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நாகார்ஜுனா, “எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அப்போ அதெல்லாம் வதந்தி இல்லையா? உண்மை தானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.