Cinema
இது முழுக்க முழுக்க பட்டா இடம்… ஒரு இன்ச் கூட ஆக்கிரமிப்பு இல்ல…. கோபத்தில் கொந்தளித்த நடிகர்….!!!
ஹைதராபாத்தில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக கூறி பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் கட்டிடத்தை அரசு இடித்து தரைமட்டமாக்கியது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாகார்ஜுனா, “இந்த இடம் பட்டாவில் உள்ளது. ஒரு இன்ச் கூட ஆக்கரமித்து கட்டப்படவில்லை. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் எந்தவித அறிவிப்புமின்றி அரங்கை இடிக்க கூடாதென நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி இவர்கள் கட்டிடத்தை இடித்துள்ளனர். நான் சட்டத்தை மதிப்பவன். தவறான தகவலால் அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்ட எனது அரங்குக்கு நிவாரணம் வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்” என கூறியுள்ளார்.