
Cinema
அந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்…. கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகர் நகுல்….!!!!
சமீபத்தில் உதவி இயக்குனர் சந்துரு என்பவர் நடிகர் நகுல் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் காண்டம் வாங்கி வர சொன்னதாகவும், அவர் நடிகைகளிடம் அட்ஜஸ்ட் செய்ய கூறுவார் எனவும் சற்று மோசமான விமர்சனங்களை கூறி இருந்தார். இந்நிலையில் இவ்வளவு நாட்கள் கழித்து இதுகுறித்து மனம் திறந்துள்ள நடிகர் நகுல் இதுகுறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சமீபத்தில் நான் நடித்த வாஸ்கோடகாமா படத்தில் அலுவலக பணியாளராக என்னுடன் பணியாற்றிய சந்துரு என்பவர் என்னைப் பற்றியும் இயக்குனர் ஆர்.ஜி. கிருஷ்ணன் மற்றும் உடன் இணைந்து பணியாற்றிய நடிகைகள் அர்த்தனா மற்றும் சுனைனா ஆகியோர் பற்றியும் மிகவும் அநாகரிகமாகவும், தவறாகவும் யூடியூப்பில் பேட்டி அளித்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ந்து இழிவாக பேசி வரும் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தோடு அவர் பேசிய யூடியூப் சேனலில் உள்ள அந்த காணொலியை நீக்க வேண்டும்” என கூறியுள்ளார்.