
Television
ஒரு வயதில் கின்னஸ் சாதனை புரிந்த மகள்…. மகிழ்ச்சியின் உச்சத்தில் குக் வித் கோமாளி பிரபலம்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் புகழ். இவர் முன்னதாக அதே டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

#image_title
அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு பெரியளவில் அடையாளத்தை பெற்று தந்தது. இதுதவிர வெள்ளித்திரையிலும் புகழ் நிறைய படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் புகழ் கடந்தாண்டு தனது நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ரித்தன்யா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தான் தனது குழந்தையின் முதல் பிறந்த நாளை புகழ் கோலாகலமாக கொண்டாடி இருந்தார்.

#image_title
இந்நிலையில் புகழின் ஒரு வயது குழந்தை ரித்தன்யா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதன்படி ரித்தன்யா சுமார் 2 கிலோ எடையுள்ள Dumbbell-ஐ 17 வினாடிகள் இடைவிடாமல் பிடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் அதிக நேரம் Dumbbell தூக்கிய குழந்தை என்ற சாதனையை புகழின் மகள் ரித்தன்யா புரிந்துள்ளார்.

#image_title
இந்த உலக சாதனை கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் புகழ் மற்றும் அவரின் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.