Gallery
தனது மகளின் புதிய வீட்டை சுற்றி பார்த்த ரஜினிகாந்த்…!!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். முதன் முதலில் தனது கணவரும் நடிகருமான தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார்.

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா இறுதியாக கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் ரஜினியும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

#image_title

#image_title
ஆனால் இந்த எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஐஸ்வர்யா இறங்கியுள்ளார். இதற்கிடையில் தனது கணவர் தனுஷிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

#image_title

#image_title
கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் அப்பா அம்மா வீட்டில் தான் வசித்து வருகிறார். இந்நிலையில் விவாகரத்து மனு தாக்கல் செய்த கையோடு புதிய வீடு ஒன்றை ஐஸ்வர்யா வாங்கியுள்ளார்.

#image_title

#image_title
அதன்படி அபார்ட்மெண்ட் ஒன்றில் அட்டகாசமான இன்டீரியர் டிசைன்களுடன் தனக்கென சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ள ஐஸ்வர்யா அதன் கிரகப்பிரவேசத்தை மிகவும் எளிமையாக நடத்தி முடித்துள்ளார்.

#image_title

#image_title
இதில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்களான ரஜினிகாந்த் லதா மற்றும் ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி என ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.