Gallery
லைகா நிறுவன முன்னாள் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் இல்ல விழாவில் பங்கேற்ற ரஜினி…!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்ததாக கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

#image_title

#image_title

#image_title
இந்த படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அதேபோல் இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

#image_title

#image_title

#image_title
மேலும் அடுத்தடுத்த படங்களிலும் ரஜினி கமிட்டாகி வருகிறார். இவ்வளவு பிசியான பணிகளுக்கு இடையிலும் தனக்கு நெருக்கமான நபர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்க ரஜினி ஒருபோதும் தவறியதில்லை.

#image_title

#image_title
அந்த வகையில் தற்போது ராஜூ மகாலிங்கம் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

#image_title

#image_title
ராஜூ மகாலிங்கம் வேறு யாருமல்ல லைகா நிறுவனத்தின் முன்னாள் கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றி வந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் 2.0 படத்தில் பணியாற்றி இருந்தார்.

#image_title

#image_title
அதனை தொடர்ந்து லைகாவில் இருந்து விலகிய ராஜூ மகாலிங்கம் நடிகர் ரஜினியின் மூத்த அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கினார். அந்த வகையில் ரஜினியின் மக்கள் மன்ற செயலாளராக பதவி வகித்து வந்தார்.

#image_title

#image_title
இந்த சூழலில் தனக்கு விஷ்வாசமாக இருந்த ராஜூ மகாலிங்கம் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு வருகை தந்த ரஜினி அவரின் குடும்பத்தினருடன் உரையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.