
Cinema
கடைசி வரை அந்த ஆசை நிறைவேறவே இல்லை… ஃபீல் பண்ணி பேசிய சசிகுமார்….!!!!
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி வருபவர் தான் சசிகுமார். சமீபத்தில் இவர் நடிப்பில் நந்தன் படம் வெளியானது. இந்நிலையில் சசிகுமார் அவர் வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “நாங்கள் எங்கள் கிராமத்தில் சிவலிங்கம் என்ற தியேட்டர் வைத்திருந்தோம். அந்த தியேட்டரில் என் படத்தை போட்டு பார்க்கணும் என்பதுதான் என்னோட ரொம்ப நாள் ஆசையாக இருந்தது. ஆனால், திடீரென பார்ட்னஸ் எல்லாரும் சேர்ந்து தியேட்டரை மூட முடிவு பண்ணிட்டாங்க. கொஞ்ச நாள் இருங்க என்னோட படத்தை இந்த தியேட்டர்ல பார்த்து விடுறேன்னு சொன்னேன். அவங்க கேட்கவே இல்லை. அதனால நான் அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ண ராம் படத்தை அந்த தியேட்டரில் முன் சீட்டில் அமர்ந்து பார்த்தேன்” என மிகவும் சோகமாக கூறியுள்ளார்.