
Television
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் நடிகர் சதீஷ்… ரசிகர்கள் என்ன கூறியுள்ளனர் தெரியுமா…???
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகர் சதீஷ். இவரின் வில்லத்தனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் இவரின் நடிப்பை பார்த்தாலே இவரை வெறி கொண்டு திட்ட தோன்றும். அந்த அளவிற்கு மோசமான கேரக்டரில் நடித்து வருகிறார் சதீஷ். இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக சதீஷ் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவரது சோசியல் மீடியா பக்கத்தில், “பொய்யை முத்தமிடுவதை விட உண்மையிடம் அறை வாங்கிக் கொள்ளலாம் என்ற கேப்ஷனுடன் அவரது புகைப்படத்தை பதிவிட்டு அதன் கீழே, பாக்கியலட்சுமி தொடரை விட்டு நான் விலகும் தருணம் நெருங்கிவிட்டது” என குறிப்பிட்டிருக்கிறார். இவரின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் நீங்க இல்லை என்றால் இனி நாங்கள் அந்த சீரியலை பார்க்கவே மாட்டோம் என கூறி வருகிறார்கள்.