Cinema
இனியும் கமலை நம்பி பிரயோஜனம் இல்ல…. அதிரடியாக முடிவெடுத்த சிம்பு…!!!
நடிகர் சிம்புவை அவரின் ரசிகர்கள் மறந்தே விடுவார்கள் போல. ஏனெனில் அவர் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. இதனால் இப்படி ஒரு ஹீரோ இருப்பதையே கோலிவுட் ரசிகர்கள் மறக்கும் நிலை உருவாகி உள்ளது.

#image_title
ஒரு சில பிரச்சனைகளை தாண்டி சிம்பு மாநாடு என்ற படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என மாறுபட்ட வேடங்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அதனால் தானோ என்னவோ தற்போது இவரை பெரிய திரையில் பார்க்கவே முடியவில்லை.
இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படத்தின் அறிவிப்பு வெளியானதோடு சரி இப்போது வரை அந்த படம் தொடங்கவே இல்லை.

#image_title
இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் சிம்புவிற்கு ஒரு கேரக்டர் வழங்கப்பட்டு அதில் சிம்பு நடித்து வருகிறார். இருப்பினும் இதற்கு மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த சிம்பு அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
அதாவது கடந்த ஆண்டு வெளியான டைனோசர்ஸ் படத்தின் இயக்குனர் எம் ஆர் மாதவனிடம் சிம்பு கதை ஒன்றை கேட்டுள்ளாராம். அது மிகவும் பிடித்து போகவே அடுத்ததாக அந்த படத்தின் கதையை டெவலப் செய்யுமாறு கூறியுள்ளாராம். ஒருவேளை அது ஓகே ஆனால் தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் இதுவாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.