Connect with us
   

Cinema

நண்பர்களால் ஆட்டம் கண்ட கெரியர்…. நடிகர் சிம்பு எடுத்த அதிரடி முடிவு….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோவாக வலம் வருபவர் தான் சிம்பு. ஆனால் இவரின் இத்தனை ஆண்டுகால திரை வாழ்க்கையில் இவர் சிக்காத சர்ச்சையே கிடையாது. அந்த அளவிற்கு ஏகப்பட்ட சர்ச்சை மற்றும் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். குறிப்பாக சிம்புவிற்கு சினிமாவிலும் சினிமா தவிர்த்தும் நட்பு வட்டாரம் கொஞ்சம் அதிகம். அதனால் தனது நண்பர்களுடன் நேரம் செலவிடுவதையே சிம்பு தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார். இதன் காரணமாக தான் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, குடி கூத்து என்று உடல் எடை அதிகரித்தது என ஏகப்பட்ட பிரச்சனைகளை சிம்பு சந்தித்தார். இந்நிலையில் தற்போது இதற்கு சிம்பு ஒரு முடிவு கட்டியுள்ளார். அதன்படி, இதுவரை தனக்கு துன்பங்களை மட்டுமே வழங்கிய கூடா நட்பில் இருந்த முழுவதுமாக விலக உள்ளாராம். மேலும் இளம் வயதில் இருந்து தன்னுடன் வரும் பிரபல நடிகர் மகத்தை மட்டும் அவரின் நட்பு வட்டத்திற்குள் வைக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர இனி தனது கலை உலக பயணத்தை மட்டுமே அவர் முழுமூச்சாக கவனிக்க உள்ளாராம்.

Continue Reading

More in Cinema

To Top