
Television
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்…. தேசியக் கொடியை மறைத்த விஜய் டிவி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!
விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கி அங்கேயே தொகுப்பாளராக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் இவர் எப்போதும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறார்.

#image_title
அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதால் படக்குழுவினர் படத்தை ப்ரமோட் செய்து வருகிறார்கள். எனவே அதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் அமரன் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் போட்டியாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அமரன் படத்தை பற்றியும் மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி மற்றும் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்தும் சிவகார்த்திகேயன் பேசினார்.

#image_title
இறுதியாக போட்டியாளர்கள் அனைவருக்கும் தேசியக் கொடி பேட்ஜ் கொடுக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் உட்பட அனைவரும் அதை அணிந்துக் கொண்டனர். ஆனால் அந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் போது அனைவர் நெஞ்சிலும் இருந்த தேசியக்கொடியின் பேட்ஜ் மட்டும் பிளர் செய்து காட்டப்பட்டது.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேசியக் கொடியை பிக்பாஸ் டீம் எதற்காக பிளர் செய்ய வேண்டும்? இதில் என்ன தவறு உள்ளது? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு சனிக்கிழமையான இன்று நடிகர் விஜய் சேதுபதி பதிலளிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.