Cinema
சிவகார்த்திகேயனால் கடுப்பான ரஞ்சித்… விமர்சனத்தை ஏற்கும் மனம் இல்லையா…???
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் வாழை படங்கள் பிடிக்கும் உங்களுக்கு ஏன் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் பிடிக்கவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் அவர் இப்படி பேச நடிகர் சிவகார்த்திகேயன் தான் காரணம் என கூறி வருகிறார்கள். அதாவது அதே வாழை பட நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “எனக்கு பரியேறும் பெருமாள் மிகவும் பிடித்து இருந்தது. அதன் பின்னர், வாழை படம் ரொம்ப பிடிச்சிருக்கு” என பேசியிருந்தார். இதற்காக தான் ரஞ்சித் அப்படி பேசியிருந்தார் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சிலர் விமர்சனங்களை ஏற்க பா. ரஞ்சித்துக்கு மனமில்லையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.