Connect with us
   

Cinema

விஜய் கொடுத்த அந்த பரிசு மிகவும் ஸ்பெஷல்…. மேடையில் கண்கலங்கி நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்…..!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது திரைப்பயணத்தை ஸ்டான்ட் அப் காமெடியனாக தொடங்கி பின்னர் தொகுப்பாளராக வளர்ந்தார். அவர் தொகுப்பாளராக இருந்த சமயத்திலேயே தனது நகைச்சுவையான பேச்சால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

#image_title

அதன் பின்னர் மெரினா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் வெகு விரைவிலேயே உச்சம் தொட்டார். இந்த அளவிற்கு ஒரு ஹீரோ உச்சம் தொட்டது என்றால் அது நிச்சயம் சிவகார்த்திகேயனாக தான் இருப்பார்.

தற்போது இவர் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

#image_title

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிவகார்த்திகேயனிடம் கோட் படத்தில் நீங்கள் கேமியோ ரோலில் நடித்தபோது விஜய் உங்களுக்கு துப்பாக்கியை கொடுத்தார். அதை தொடர்ந்து வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்தார்.

#image_title

இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்த பரிசு எது என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “தளபதி கொடுத்த அந்த அன்பு. அதுதான் எப்பவுமே ஸ்பெஷலானது. அந்த அளவுக்கு விஜய் என் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க அனுமதித்தார். மேலும் என்னை நேரில் சந்தித்தவுடன் வாட்ச் பரிசளித்து தன் அன்பை வெளிப்படுத்தினார்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top