
Cinema
அடுத்த தளபதி நானா…??? கேள்விக்கு யோசிக்காமல் பதிலளித்த சிவகார்த்திகேயன்….!!!
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளதால் அவர் இடத்தை நிரப்ப போவது சிவகார்த்திகேயன் தான் என பலரும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமின்றி கோட் படத்தில் விஜய்யே தனது கையில் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து இனி நீங்க தான் பார்த்துக்கனும் என கூறி இருப்பார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிவகார்த்திகேயனிடம் அடுத்த தளபதி நீங்க தானா என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “நிச்சயம் அப்படி கிடையாது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரே ஒரு தளபதி, ஒரே ஒரு தல, ஒரே ஒரு உலகநாயகன், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அவர்களுடைய நடிப்பை பார்த்து சினிமா கற்றுக் கொண்டவன் நான். அவர்களை போல கடினமாக உழைத்து, அவர்களை போல நல்ல படங்களை கொடுக்க ஆசைப்படலாம். ஆனால் அவர்களாகவே ஆக நாம் ஆசைப்படுவது ரொம்பவும் தவறு” என கூறியுள்ளார்.