Connect with us
   

Cinema

அதற்கு காரணம் நாங்கள் அல்ல…. நடிகர் சூரி தரப்பில் அளிக்கப்பட்ட அதிரடி விளக்கம்….!!!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நட்சத்திர நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் நாள்தோறும் இலவசமாக மதிய உணவு வழங்கி வந்தனர். இதன் மூலம் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அந்த அமைப்பை சேர்ந்த நபர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு காரணம் அங்கு அமைந்துள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவக ஊழியர்கள் தான் என செய்திகள் பரவி வந்தன. தற்போது இதுகுறித்து நடிகர் சூரி தரப்பில் அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவச உணவு வழங்க தடை விதிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல. கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தான் வெளிநபர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்கள் உணவகம் தான் இலவச உணவு வழங்குவதை தடுப்பதாக பொய்யான செய்தி பரவுகிறது. இனியும் அப்படி பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்” என கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top