
Cinema
விஜய்க்கு மட்டும் நோ சொல்லிவிட்டு அனிருத்துக்கு ஓகே சொன்ன நடிகை… கடுப்பில் ரசிகர்கள்…!!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மட்ட என்ற பாடலில் நடிகை த்ரிஷா விஜய்யுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் முன்னதாக முதலில் இந்த பாடலில் நடனமாட தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா என்பவரை தான் வெங்கட் பிரபு கேட்டுள்ளார். ஆனால் அவரோ நான் தமிழில் ஹீரோயினாக தான் அறிமுகமாக விரும்புகிறேன். எனவே விஜய் படமாக இருந்தாலும் ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார். இந்நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் அனிருத் உடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார் ஸ்ரீ லீலா. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இது என்ன நியாயம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.