Cinema
நீயா நானாவில் கலங்கிய மாணவன்… உடனே தேடிச்சென்று உதவிய விஜய்…!!!!
விஜய் டிவியில் நேற்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவன் ஒருவன் தான் தினமும் பழக்கடை ஒன்றில் மூட்டை தூக்கும் வேலை பார்ப்பதாகவும், ஒவ்வொரு மூட்டையும் 10 கிலோ இருக்கும். அதை தூக்கி தேள்பட்டை முழுவதும் வலிக்கும். ஆனால் அதை வீட்டில் சொல்ல மாட்டேன். என் அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கனும் என மிகவும் கண்கலங்கியபடி பேசியிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் உடனடியாக அந்த மாணவரின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளனர். அதன்படி கோவில்பட்டியை சேர்ந்த அந்த மாணவனின் வீட்டை கண்டுபிடித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அங்கிருக்கும் தவெக நிர்வாகி மூலம் அந்த மாணவனின் அம்மாவிற்கு மெத்தை மற்றும் ஒரு மாதம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள். இதுதவிர அவரின் கல்லூரி செலவு முழுவதையும் ஏற்பதாக கூறி அவர்களின் வங்கி கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் பணமும் போட்டுள்ளனர். இதனை அந்த மாணவனின் அம்மாவே கூறியுள்ளார்.