Cinema
தளபதியை சிக்கலில் சிக்க வைத்த கட்சி நிர்வாகி…. அரசியல் வாழ்க்கை தொடங்கும் முன்பே முடிந்து விடுமா..??
நடிகர் விஜய் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார். எந்த அளவிற்கு என்றால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகியுள்ள விஜய் கில்லி படம் இன்றும் சுமார் 30 கோடி வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

#image_title
அந்த அளவிற்கு விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமல்ல ஒரு பட்ததிற்கு 200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் இதையெல்லாம் வேண்டாமென உதறிய விஜய் விரைவில் முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார்.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி எல்லாம் தொடங்கி விட்டார். தற்போது கைவசம் இருக்கும் கோட் மற்றும் தளபதி 69 ஆகிய படங்களை முடித்த பின்னர் அரசியலில் இறங்க உள்ளார். ஆனால் அதற்கு முன்பே தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகள் விஜய்யின் அரசியல் வாழ்க்கையை காலி செய்து விடுவார்கள் போல.

#image_title
அதாவது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஆரணி தொகுதி தலைவராக இருந்து வருபவர் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த விஜய் முருகன். இந்நிலையில் இவர் அந்த பகுதி மக்களிடம் சீட்டு பிடிப்பதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இவரிடம் சீட்டு கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்க இப்போது அப்போது என விஜய் முருகன் நேரத்தை கடத்தி வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த பெண்கள் சிலர் இன்று அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தற்போது இது காவல்துறை வழக்காக மாறியுள்ளது.

#image_title
நடிகர் விஜய் அரசியல் என்பது மக்கள் பணி எனவே அதை முழு மனதுடன் செய்ய வேண்டும் என்பதற்காக மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு வரவுள்ளார். இப்படி உள்ள சூழலில் அவரின் நிர்வாகிகள் விஜய்யின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.