Gallery
அதிதி சங்கருடன் கலக்கலாக போஸ் கொடுத்த தளபதி விஜய் மகன்…!!!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இதில் ஒட்டுமொத்த கோலிவுட் பிரபலங்களும் பங்கேற்று இருந்தனர்.

#image_title

#image_title

#image_title
ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் இந்த திருமணத்தை சங்கர் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார். மேலும் தனது அக்காவின் திருமணத்தில் அதிதியின் அதிரடி போட்டோ ஷூட்களை நடத்தி உள்ளார்.

#image_title

#image_title

#image_title
திருமணம் முடிந்த நாள் முதல் தற்போது வரை புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளார்.

#image_title

#image_title
முன்னதாக சங்கர் மகள் திருமண சமயத்தில் விஜய் கோட் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் வர முடியாமல் போனது. அவருக்கு பதிலாக அவரின் மனைவி சங்கீதா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் பங்கேற்றனர்.

#image_title

#image_title
அதுமட்டுமல்ல இயக்குனர் சங்கரின் மகன் அர்ஜித்தும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கூட ஜேசன் இந்த திருமணத்தில் பங்கேற்று இருக்கலாம்.

#image_title

#image_title
இதுதவிர ஜேசன் சஞ்சய் துருவ் விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் அதிதி சங்கர் தான் நாயகி என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ இந்த போட்டோவில் பார்ப்பதற்கு ஜேசன் ஹீரோ போல செம ஸ்மார்ட்டாக காட்சி அளிக்கிறார்.