Cinema
அவசர அவசரமாக தனி விமானத்தில் பறந்த விஜய்…. எங்கு சென்றுள்ளார் தெரியுமா…???
நடிகர் விஜய் சமீபத்தில் அவரின் கட்சி கொடியை அறிமுகம் செய்ததில் இருந்து தொடர்ந்து பிரச்சனை தான் வெடித்து வருகிறது. ஏனெனில் கட்சி கொடியில் இருக்கும் யானை படம் எங்களின் சின்னம் அதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என கூறி பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதற்கிடையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடும் நடைபெற உள்ளது. எனவே இவை அனைத்தும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.