Cinema
கேப்டன் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது… மறைந்து பின்னரும் சாதனை படைத்த விஜயகாந்த்….!!!!
தமிழ் ரசிகர்களால் கேப்டன் என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் தான் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு பல அவமானங்களை கடந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் விஜயகாந்த்.

#image_title
படத்தில் மட்டும் ஹீரோவாக நடிக்காமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே வாழ்ந்து மறைந்த நடிகர் தான் விஜயகாந்த். உதவி என்று தன்னை தேடி வந்தவர்களை கைவிடாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து சந்தோசப்பட்ட உன்னதமான மனிதர்.
அதுமட்டுமல்ல தன்னை யார் பார்க்க வந்தாலும் முதலில் சாப்பிட்டீங்களா என்று கேட்பதோடு மட்டுமின்றி சாப்பிட வைத்து அழகு பார்க்கும் அன்பான இதயம் கொண்டவர். உயிரோடு இருக்கும்போது பலரின் பசியாற்றிய விஜயகாந்த் தற்போது மறைந்த பின்னரும் அவரது நினைவிடத்தில் பலரின் பசியாற்றி வருகிறார்.

#image_title
விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போது செய்த சேவையை அவரின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தற்போது தொடர்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது கிடைத்துள்ளது. தொடர்ந்து உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்த் நினைவிடம் உள்ளது.

#image_title
எனவே பிரபல நிறுவனமான லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 125 நாட்களில் மட்டும் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்திற்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.