Cinema
நடிகர் சரவணன் செய்த செயல்… சட்டென கடுப்பான விஜய் சேதுபதி…!!!
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று பேசினார். அதன்படி அவர் பேசியதாவது, “படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். விமல் சிறந்த நடிகர் என்பது எனக்கு முன்னரே தெரியும். கூத்துப் பட்டறையில் நான் விமலின் ரசிகன். சரவணன் சாரும் நன்றாக நடித்துள்ளார்” என விஜய் சேதுபதி கூறினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதி காலில் சரவணன் விழுந்தார். இதனை கண்டு ஷாக்கான விஜய் சேதுபதி, “கொஞ்சம் பெரிய மனுசன் மாதிரி நடந்துக்கோங்க” என சிரித்தபடியே கூறினாலும் அவரின் முகம் கொஞ்சம் சீரியசாக மாறியது. இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் கொஞ்சம் பரபரப்பு நிலவியது.