
Cinema
கோட் மோதிரம் போட்டு மாஸாக போஸ் கொடுத்த விஜய்…. அந்த மோதிரத்தை கொடுத்தது யார் தெரியுமா….???
நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்நிலையில் இந்த பட பூஜையில் பங்கேற்ற நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி கோட் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெரிய மோதிரம் ஒன்றை விஜய் அணிந்துள்ளார். அதை மாஸாக காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த தயாரிப்பாளர் டி சிவா நடிகர் விஜய்க்கு பரிசளித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் 5 ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் கோட். இப்படம் உலகளவில் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.