Cinema
வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்…. ரத்னத்தால் மொத்தமாக இழந்த விஷால்….!!!!
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து சொதப்பிய நிலையில், கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.

#image_title
இருப்பினும் அதில் விஷாலை விட எஸ்ஜே சூர்யா தான் பரவலாக பேசப்பட்டார். அந்த அளவிற்கு அவரின் நடிப்பும் படத்தில் பாராட்டை பெற்றது. அதனை தொடர்ந்து விஷால் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் காரணமாக பெரிய திரையரங்குகள் அனைத்தும் கில்லியை எடுத்து கொண்டன. இதனால் ரத்னம் படத்திற்கு சிறிய தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தது.

#image_title
அதுமட்டுமல்ல படத்தின் திரைக்கதை பலவீனமாக இருந்ததால், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. மேலும் படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் உதயநிதியின் ரெட் ஜெய்ன்ட் நிறுவனத்திற்கு எதிராக வார்த்தைகளை விட்டார். அதன் காரணமாக சில இடங்களில் ரத்னம் படத்தை வெளியிட முடியாமல் போனது.
இதனால் விஷாலுக்கு உண்மையில் நஷ்டம் தான். அதாவது விஷால் இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையால் படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார். மாறாக படத்தை விநியோகம் செய்யும் உரிமையை கொடுங்கள் என்று கேட்டு வாங்கியுள்ளார்.

#image_title
அதன்படி இந்த படத்தை விஷால் தெலுங்கில் 4.5 கோடிக்கு விற்பனை செய்து விட்டார். ஆனால் தமிழகத்தில் 5 முதல் 6 கோடி வரை தான் அவருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அவருக்கு 5 கோடி வரை நஷ்டம் தான். இதுக்கு பேசாம அவரு சம்பளத்தையே வாங்கிட்டு போயிருக்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.