Connect with us
   

Cinema

என்னது வருஷா வருஷம் ஓட்டு போடுவீங்களா….??? உருட்டா இருந்தாலும் நியாயம் வேண்டாமா…?? கேலிக்கு ஆளான ஜோதிகா….!!!

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்து வெற்றிகரமாக நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடித்த சைத்தான் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

#image_title

அதனை தொடர்ந்து தற்போது ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதன் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதற்காக வாக்களிக்க வரவில்லை என்ற கேள்வியை ஜோதிகாவிடம் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த ஜோதிகா, “ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் வாக்களிப்பேன்” என்றார். அப்போது இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர் தேர்தலே ஐந்தாண்டுக்கு ஒருமுறை தான் வரும் என கூறினார். உடனே சுதாரித்து கொண்ட ஜோதிகா அதனை திருத்தி கொண்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் வாக்களிப்பேன்.

ஆனால் சில தவிர்க்க முடியாது காரணங்கள் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போவது போன்ற காரணங்களால் வாக்களிக்க முடியாமல் போவது வழக்கம் தான். இது அனைவருக்கும் நடக்கும் விஷயம் தான். அதுபோன்ற ஒரு தனிப்பட்ட காரணத்தால் தான் என்னால் வாக்களிக்க வரமுடியவில்லை.

மேலும் அதான் தற்போது ஆன்லைன் வாக்கு வந்துவிட்டதே எனவும் ஜோதிகா கூறியுள்ளார். இதை கேட்டு பலரும் ஷாக்காகி உள்ளனர். அதுமட்டுமல்ல இவரின் இந்த பேச்சை பங்கமாக டிரோல் செய்யவும் தொடங்கி விட்டார்கள். ஆன்லைன்ல ஓட்டு போடலாம் என்பது தெரியாமல் வரிசையில் நின்று எங்கள் நேரத்தை வீணடித்து விட்டோம் என பலரும் கமெண்ட்டில் கூறி வருகிறார்கள்.

Continue Reading

More in Cinema

To Top