Cinema
அந்த ஹீரோ படமா…??? சம்பளம் வாங்காம கூட நடிக்க தயார் – கீர்த்தி சுரேஷ்…!!!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ரகுதாத்தா என்ற படம் நாளை வெளியாக உள்ளது. இதுதவிர பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நானி படம் என்றால் சம்பளம் கூட வாங்காமல் நடிப்பேன் என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “எனக்கும் நானிக்கும் இடையேயான நட்பு மிக சிறந்தது. அவரை போன்ற ஒரு நல்ல நண்பர் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் படம் என்றால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிப்பேன்” என கூறி நெகிழ்ந்துள்ளார்.