Connect with us
   

Cinema

இந்து மதத்தை மட்டும் துஷ்பிரயோகம் செய்வது ஏன்…??? நடிகை குஷ்பு காட்டம்….!!!!

திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து அதனை கிண்டல் செய்யும் விதமாக ஏகப்பட்ட மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இதற்கு மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ள நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, “திருப்பதி லட்டு பற்றி அதிகம் பேசப்படுகிறது. இதில் நான் கவனித்ததெல்லாம், இந்து மதம் குறிவைக்கப்படும் போதெல்லாம், அமைதியாக கடந்து செல்லும் மனோபாவத்தை கொண்டிருக்குமாறு நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். என்ன நியாயம்? ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி இப்படி பேசுவதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இந்து மதத்தை அவமதிப்பதையோ, கிண்டல் செய்வதையோ சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு விவகாரம் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துகிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். வெங்கடேசப் பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என மிகவும் கோபமாக பதிவு செய்துள்ளார்.

Continue Reading

More in Cinema

To Top