Cinema
அவர் ப்ரப்போஸ் பண்ணது உண்மை தான்… ரஜினியுடன் மட்டும் கிசுகிசு வந்தது ஏன்…. மனம் திறந்த நடிகை லதா…!!?
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 காலகட்டங்களில் எம்ஜிஆர் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை லதா. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “தமிழில் எந்த நடிகருடனும் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகவில்லை.ஆனால் ரஜினியுடன் மட்டும் தான் என்னை இணைத்து இதுபோன்ற கிசுகிசுக்கள் வெளியானது. இருப்பினும் ரஜினி எனக்கு மிகப்பெரிய நண்பர். அவர் மிகச்சிறந்த மனிதர்” என கூறியுள்ளார். மேலும் மலையாள நடிகர் என்னிடம் காதலிப்பதாக கூறி திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்தார். அதுகுறித்து நான் யோசித்து முடிவெடுப்பதற்கு முன்பாகவே அவர் விபத்தில் மரணமடைந்து விட்டார்” என தெரிவித்துள்ளார்.