Cinema
நீங்க என்ன சாதி…. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரபல நடிகைக்கு நேர்ந்த சம்பவம்….!!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை நமீதா இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரி ஒருவர் நீங்க இந்துவா? என்ன சாதி? சான்றிதழ் இருக்கா? என கேட்டு தன்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியதாக நமீதா குற்றம் சாட்டி உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “நான் இந்து என்பது அனைவருக்குமே தெரியும். என் குழந்தைகளுக்கு கூட கிருஷ்ணனின் பெயரை தான் வைத்துள்ளேன். இந்தியாவில் பல கோவில்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இதுபோன்று என்னிடம் யாருமே கேள்வி கேட்டதில்லை. அந்த அதிகாரி இதுபோன்று என்னிடம் கடுமையான கேள்வி எழுப்பியது வேதனையாக உள்ளது. அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.