Cinema
அக்கா கேரக்டரில் நடிக்கனுமா…??? டபுள் மடங்கு சம்பளம் கேட்கும் லேடி சூப்பர் ஸ்டார்….!!!
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

#image_title
இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கேஜிஎஃப் படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கன்னட நடிகர் யஷ் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் யஷ் பிரபல இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தில் அக்கா கேரக்டரில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கரீனா கபூரை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருந்தனர்.

#image_title
ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். அந்த கேரக்டர் படத்திற்கு மிகவும் முக்கியமான கேரக்டர் என்பதால் தற்போது நடிகை நயன்தாராவை படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் அவரோ படக்குழுவினருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
அதாவது வழக்கமாக ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா இந்த படத்திற்கு அப்படியே இரண்டு மடங்கு சம்பளம் கேட்டாராம். அதாவது 20 கோடி கொடுத்தால் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் படக்குழுவினர் என்ன செய்வதென யோசிப்பதாக கூறப்படுகிறது.